திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் குட்டிகுடி திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 11:04
திருச்சி: திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் குட்டி குடித்திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மருளாளி ரத்தம் குடித்ததை பார்த்து பரவசமடைந்தனர். திருச்சி தென்னூரில் உள்ள உக்கிர மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 1ம் தேதி காளிவட்டத்துடன் துவங்கியது. 2ம் தேதி சுத்த பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமான சந்தன கருப்பசாமியின் குட்டி குடிக்கும் நிகழ்ச்சி மற்றும் அருள் வாக்கு கூறுதல் நடந்தது. இதில், பக்தர்கள் கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார். இதை பார்த்து பக்தர்கள் பலர் பரவசமடைந்தனர். ஆயிரகணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்பட்டது. கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.