பதிவு செய்த நாள்
04
ஏப்
2014
12:04
காரிமங்கலம்: காரிமங்கலம் சென்னம்பட்டி ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா, வரும், 8ம் தேதி முதல், 15ம் தேதி வரை நடக்கிறது. வரும், 8ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 11 மணிக்கு, கொடியேற்றமும் நடக்கிறது. 9ம் தேதி சிறப்பு அபிஷேகமும், இரவு, 9 மணிக்கு, ஸ்வாமிக்கு திருவீதி உலாவும், 10ம் தேதி சிறப்பு அபிஷேகம், இரவு, 9 மணிக்கு, காவடி ஆட்டத்துடன் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 11ம் தேதி சிறப்பு அபிஷேகமும், இரவு, 9 மணிக்கு காவடி ஆட்டம், கரகாட்டம், ஸ்வாமி திருவீதி உலா நாடகமும் நடக்கிறது. 12ம் தேதி சிறப்பு அபிஷேகமும், இரவு, 1 மணிக்கு ஸ்வாமி திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் நடக்கிறது. 13ம் தேதி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், காலை, 10 மணிக்கு ஸ்வாமி ரத ஏற்றமும், பக்தர்கள் அலகு குத்துதல் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, 9 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது. 14ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, தேர் பவனி வரும் நிகழ்ச்சியும், பந்தகாசி ஊர்வலமும், 15ம் தேதி சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஊர் கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.