புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் 9ம் தேதி தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 12:04
கச்சிராயபாளையம்: நல்லாத்தூர் புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் துவங்குவதை ஒட்டி கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்தூரில் உள்ள பிரசித்திப்பெற்ற புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று முதல் தேர் திருவிழாவும், சித்திரை மாதம் முதல் புதன் கிழமையன்று எட்டாம் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் 9ம் தேதி முதல் தேர் திருவிழாவும், 16ம் தேதி எட்டாம் நாள் தேர் திருவிழா நடைபெறஉள்ளது. இத்திருவிழாவிற்கு சுற்று வட்டாரங்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வார்கள். திருவிழா துவங்க இன்னும் இரு நாட்களேஉள்ளதால் கோவில் அருகில் வியாபாரிகள் கடைகள், மெகாசைஸ் ராட்டினம் போன்றவற்றை அமைக்கும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.