செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பொன்பத்தி கிராமத்தில், வறட்சியால் விவசாயம் பாதித்துள்ளது. குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்கிராம மக்கள் மழை பெய்ய வேண்டி முரட்டுசம்பாத்தாள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஏரிக்குச் சென்ற கிராம மக்கள், அக்கோயிலை சுற்றிலும் சுத்தம் செய்தனர். படுத்திருந்தநிலையில் இருந்த முரட்டுசம்பத்தாள் அம்மன் சிலையை நிமிர்த்தி பல்வேறு அபிஷேகம் செய்தனர். சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கிராம மக்கள் பொங்கலிட்டு அம்மனுக்குப் படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.