சிதம்பரம் ; கடலூர் மாவட்டம், சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. முன்னிட்டு நேற்று வசந்த உத்ஸவமும், ருக்மணி கல்யாணமும் நடந்தது. தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதிஉலா வந்தார்.காலை சூர்ணோத்ஸவம் நடைபெற்றது. மாலை வசந்த உத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீகோதண்டராமருக்கு மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த எண்ணெய் உள்ளிட்ட பரிமலதிரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சந்திரபிரபை வாகனத்தில் வீதி உலாவும் நடந்தது.