வியாபாரத்தில் முதல் விற்பனையை போணி என்று சொல்லும் வழக்கம் உண்டு. இந்தவியாபாரச் சொல் எங்கிருந்து வந்தது தெரியுமா?சாம்ராட் சிவாஜி மகாராஷ்டிராவை ஆண்ட காலத்தில், மும்பை வியாபாரிகள் முதல் விற்பனை தொகையை தாங்கள் வணங்கும் பவானிஅம்மனுக்கு காணிக்கை செலுத்துவதற்காக எடுத்து வைத்துவிடுவார்கள். பவானி ரூபே... பவானி ரூபே (பவானிக்குரிய பணம்) என்று அவர்கள் சொன்ன சொல்லில் உள்ள பவானி காலப்போக்கில் மருவி போனி ரூபே...போனி ரூபே என்று ஆனது. அதுதமிழகத்துக்கு வரும் போது, இரண்டு சுழி னி மூன்றாக மாறி, போணி ஆகி விட்டது. போணிஆயிடுச்சா! என்று கேட்கும் வழக்கம் பவானி எனப்படும் பார்வதியின் பெயரால் சொல்லப்படுவது. இனி, நீங்களும்அம்பாளுக்கு முதல்விற்பனைத் தொகையை எடுத்து வைக்கலாம். அம்பாளின் அருளைப் பெறலாம்.