விழுப்புரம்: ராமநவமியையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் ராமராஜ்ய சிறப்பு பிராத்தனை விழுப்புரத்தில் நடந்தது. ராமநவமியை யொட்டி இந்து அமைப்புகள் சார்பில் ராமராஜியம் அமைய விழுப்புரம் ஜி.ஆர்.பி., வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ராமர் பட்டாபிஷேகம் பற்றிய கதைகளை பஜனை பாடல்கள் மூலம் அர்ச்சகர் ராகவேந்திரர், அப்பகுதி சிறுவர்களுக்கு கூறினார். பா.ஜ., மாநில பொதுக்குழு சவுந்தர், மாவட்ட துணை தலைவர் சுகுமார், இந்து முன்னனி நகர தலைவர் ராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.