புதுகை: புதுக்கோட்டை திருக்கோவில் களை சேர்ந்த கடையக்குடி பிரசன்ன ரெகுநாத பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 9–ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ராமர், சீதை, லெட்சுமணர் ஆகிய சாமிகளை பட்டு மற்றும் மலர்களால் அலங்கரித்து, தேரில் எமுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்செல்ல, தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட் டனர்.