பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
திருத்தணி : சாய்பாபா கோவிலில், நேற்று நடந்த ராமநவமி உற்சவ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, ராமநவமி உற்சவ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து காகட ஆரத்தியும் நடந்தது. காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை, மூலவர் சாய்பாபாவிற்கு, மாணவர்கள் மற்றும் பக்தர்கள் பாலாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீர்த்தபிரசாத வினியோகம் நடந்தது. மாலை, 5:15 மணிக்கு சந்திய ஆரத்தி நடந்தது.