காளையார்கோவில்: உருவாட்டி வெள்ளானையுடைய அய்யனார்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5மணிக்கு அனுஞ்சை விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கியது. சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை, யாகபூஜைகளும் நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு,10 மணிக்கு வெள்ளானையுடைய அய்யனார், பெரிய கருப்பண்ணசாமி, காளியம்மன், விநாயகர் பரிவாரமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.