போரூர் : திருவள்ளூர் மாவட்டம், போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் கோயிலின் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நவக்கிரக குரு ஸ்தலமான இக்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகர் பூஜை, கோ பூஜைகள் நடைபெற்றன.இதனைத்தொடர்ந்து ஆறுகால யாக பூஜைகள் செய்யப்பட்டு புதன்கிழமை காலை 10 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.