உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு திரவுபதியம்மன் கோவிலில் திரவுபதியம்மன், அர்ச்சுனன் சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 1ம் தேதி காலை 7.30 மணிக்கு கோவிலில் கொடியேற்றம் நடந்தது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்வதையொட்டி திரவுபதியம்மனுக்கும், அர்ச்சுனனுக்கும் அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு யாகத்துடன் மந்திரங்கள் முழங்க காலை 9.15 மணிக்கு திரவுபதியம்மனுக்கு அர்ச்சுனன் தாலி கட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமசாமி மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். 15ம் தேதி இரவு 7 மணிக்கு அரவான் கடபலி கொடுத்தல் நடக்கிறது. 17ம் தேதி காலை 9 மணிக்கு தேர் ரத உற்சவம் நடக்கிறது. தேரினை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் துவக்கி வைக்கிறார்