தாண்டிக்குடி : தாண்டிக்குடி அருகே ஏழு கி.மீ., தொலைவில் உள்ளது அரசன்கொடை. இங்கு ஆயிரத்து 500 அடி உயர மலைச்சரிவில் அமைந்துள்ளது கதவுமலைநாதன் சிவன் கோயில். சித்திரை தமிழ்புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொடைக்கானல், தாண்டிக்குடி, பாச்சலூர் பகுதி மக்கள் நடைபயணமாக அரசன்கொடை வருகின்றனர். கிராம மக்களே குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை செய்கின்றனர். கோயிலுக்கு செல்லும் சரிவான மலைப்பாதையை சரிசெய்து பக்தர்கள் தரிசனம் செய்ய உதவி வருகின்றனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தாண்டிக்குடி வனவர் முகமதுதாஜூதீன் தலைமையிலான வனத்துறையினர் பக்தர்களிடம் காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தனர். பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்த பின் அனுமதிக்கப்பட்டனர். இப்பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.