விழுப்புரம்: தெளி கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவிலில் பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தன்று தெளி கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி அன்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பகல் 11:00 மணிக்கு பெண்கள் 108 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்பட்டு கூட்டுறவு வங்கி செயலாளர் சாரங்கபாணி செய்திருந்தார்.