திருச்செந்தூர்: திருச்செந்தூர் அகத்தியர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை விஷுவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி மற்றும் அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம் மற்றும் மகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன.