மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூர் மாரியம்மன் கோவிலில் நேற்று சாகை வார்த்தல் திரு விழா நடந்தது மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனூர் மாரியம்மன் கோவில் விழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஐந்து நாட்கள் உற்சவ விழாவும், நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் விழா நடந்தது. நேற்று சாகை வார்த்தல் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சேர்ந்து கூழ்குடங்கள், கஞ்சி மற்றும் பால் குடங்களை தூக்கிச் சென்றனர். இன்று மாரியம்மன் தேர் ஊர்வலம் நடக்கிறது.