பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
12:04
பாகூர்: பாகூரில் 1400 ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், இன்று (26ம் தேதி) சனி மகா பிரதோஷ வழிபாடு நடக்கிறது. அதையொட்டி, காலை 9:00 மணிக்கு, வேதாம்பிகையம்மன், மூலநாதர், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷ வழிபாடு துவங்குகிறது. கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து காட்சியளிக்கும் செல்வநந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
திருவண்டார்கோவில்: பஞ்சநதீஸ்வரர் கோவிலில், இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 5:40 முதல் 6:40 மணி வரை சனிப்பிரதோஷ வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.