தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே காலபைரவர் கோயிலுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு கடந்த 25-ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 9.45 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.