கடிக்காத சிறிய எறும்புகளை சுவாமி எறும்பு என்று குறிப்பிடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2014 04:04
யாருக்கும் துன்பம் கொடுக்காதவர்கள் உயர்ந்தவர்கள் அல்லவா? எறும்பு என்றாலே கடிக்கும் சுபாவம் கொண்டது. ஆனால், இந்த கருப்பு எறும்பு மட்டும் யாரையும் கடிப்பதில்லை. அதனால் சுவாமி எறும்பு என்று குறிப்பிடுகிறோம். எந்த சுவாமிக்கு படையல் இல்லாவிட்டாலும், பிள்ளையாருக்கு யாராவது ஒருவராவது மறக்காமல், சிதறுகாய் ஒன்றாவது உடைத்து விடுவார். ஒரு வெல்லத்தை வைத்தாவது வணங்குவார். அச்சு வெல்லத்தையே பிள்ளையாராக கருதி வழிபடுவோரும் உண்டு. இவற்றைத் தேடி இந்த எறும்புகள் அதிகமாக வரும் என்பதால், இதற்கு பிள்ளையார் எறும்பு என்றும் பெயர் வந்தது.