காரைக்கால்: தருமபுரத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் தருமபுரத்தில் உள்ள மிகப் பழமையான புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத் திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் மாவட்ட பங்குத் தந்தை அந்தோணி லுார்துராஜ், உதவி பங்குத் தந்தை விக்டர், தூய மரியன்னை மேனிலைப்பள்ளி முதல்வர் அந்தோணி ராஜ் மற்றும் திருப்பட்டினம் பங்குத் தந்தை ரட்சகர் ஆகியோரின் சிறப்பு திருப்பலியை தொடர்ந்து, கொடியேற்றம் நடந்தது. முன்னதாக செபஸ்தியார் உருவம் உள்ள கொடியை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 3ம் தேதி ஐந்து பெரிய தேர்கள் பவனி வரும்.