பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
04:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிடந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஏராளமானோர் போட்டியிடுகின்றனர். பிறந்த 10 நாட்களே ஆன, தொப்புள் கொடி அறுத்த நிலையில் கோயிலில் நேற்று மாலை 4,12 மணிக்கு பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது. அக்குழந்தை பசி தாங்குமா, உயிருக்கு என்னாகும், என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காத தாய், ஈவு இறக்கமின்றி குழந்தையை விட்டுச் சென்றாலும், , கோயிலில் பணியாற்றும் மகளிர் குழுவினரும், பெண் போலீசாரும் அக்குழந்தையை சுற்றி நின்று கவனமாக காத்து நின்றனர். குழுந்தை அழுதபோது, அவர்கள் ஓட்டமும் நடையுமாக சென்று பால் வாங்கிவந்து, பீடிங் பாட்டிலில் கொடுத்தனர். பாட்டிலில் பால் குடிக்கத் தெரியாத அக்குழந்தை அலறியதும், கரண்டிமூலம் பால் ஊட்டி பராமரித்தனர். போலீஸ் விசாரணை நடந்த நான்கு மணிநேரமும் அவர்கள் குழந்தைக்கு அரணாக நின்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரண்டு போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர். கோயிலுக்குள் குழந்தை கிடந்த செய்தி அறிந்த உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, கோயில்பட்டி, ராமநாதபுரம் உட்பட பல்வேறு வெளியூர்களிலிருந்தும் குழந்தையை தத்தெடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.