ஸ்ரீவில்லிபுத்தூரில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2014 10:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில், மழை வேண்டி, திருமுக்குளம் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான, திருமுக்குளம் உள்பகுதியில் சக்கரத்தாழ்வார் தண்ணீரில் முழ்கிய நிலையில் இருப்பார். கடந்த இரு ஆண்டுகளாக மழை இல்லாததால், இக்குளம் வறண்ட நிலையில் உள்ளது. இதில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதையொட்டிக நேற்று காலைக பக்தர்கள் சார்பில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.