பதிவு செய்த நாள்
30
ஏப்
2014
12:04
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மழை வேண்டி வேள்வி பூஜை நடந்தது.நெல்லிக்குப்பம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் கலச விளக்கு வேள்வி பூஜையும், சமுதாய பணிகள் நல விழாவும் நடத்தப்பட்டது. சிறப்பு யாகமும், 1008 போற்றிகள் பாடியும் பூஜைகளை செய்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், ஆடைகள், மாணவர்களுக்கு எழுது பொருட்கள், மரக்கன்றுகளை மாவட்டத் தலைவர் கிருபானந்தம் வழங்கினார். செல்வராஜ், ஏழுமலை, சுப்ரமணியன், சம்பத்குமார், மோகன், தனலட்சுமி, மயிலம்மாள், மேனகா உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர்.