விக்கிரவாண்டி: விக்கிரவாண்டிஒன்றியம் தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் சித்திரை மூன்றாம் வெள்ளி உற்சவம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் சித்திரை மாதத்தின் மூன்றாம் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுயம்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு படையலிட்டனர். அபிஷேகம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் அபிராமேஸ்வர அய்யர் தலைமையில் சந்திரசேகர், கிரிதரன் செய்தனர்.