விருத்தாசலம்: நாகாத்தம்மன் @காவிலில் நடந்த செடல் உற்சவத்தில் ஏராளமானோர் பால்குடம் சுமந்து, செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விருத்தாசலம் செல்வராஜ் நகர், நாகாத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 25ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது.நேற்று செடல் உற்சவத்தையொட்டி, காலை 9:00 மணியளவில் பக்தர்கள் மணிமுக்தாற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் சுமந்து, செடல் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இரவு அலங்கரித்த வாகனத்தில் நாகாத்தம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் ”வாமி தரிசனம் செய்தனர்.