பதிவு செய்த நாள்
05
மே
2014
11:05
திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில், சித்திரை தேர் பிரமோத்ஸவ விழா,கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமனுஜரால் பாடல் பெற்ற, வைணவ தலங்களில் ஒன்று என்ற சிறப்பு பெற்ற ஸ்தலம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு, சித்திரை தேர் பிரமோத்ஸவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, கணபதி, பூமி பூஜைகள் நடந்தது. மூலவர் கருடனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது.நேற்று சக்கரத்தாழ்வார், கருடன் படம் வரைந்த, கொடி பட்டம் திருவீதி உலா வந்தது. காலை 10:10 மணிக்கு, கோயில் கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. நேற்று இரவு, சுவாமிக்கு காப்பு கட்டினர். பூதேவி, ஸ்ரீதேவியருடன் பெருமாள் திருவீதி உலா வந்தார். விழாவை முன்னிட்டு, தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெறும். தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்வாக, மே-13 அன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருள்வார். மாலை 4:50 மணிக்கு, தேரோட்டம் நடைபெறும்.