தண்டராம்பட்டு, தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது . முன்னதாக விக்கேஷ்வர பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கோ பூஜை, கண்திறத்தல், ஸ்தூபித்தல், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு கும்பாபிஷேகம், தீபராதனை செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.