பதிவு செய்த நாள்
05
மே
2014
01:05
பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சக்கரத்தாழ்வாருக்கு லட்சார்ச்சனை பெருவிழா 6 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம், சந்தனக்காப்பு சாற்றுப்படி நடைபெறுகிறது. நாளை காலை அனுகை, சங்கல்பம், . 7--ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, தீபாராதனைகள் நடைபெறும். 9-ஆம் தேதி இரவு புண்ணிய யாகம், கலச ஸ்தாபனம் , லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடைபெறுகிறது. 10--ம் தேதி காலை மகா சுதர்சன ஹோமம் ,சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.