குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 01:05
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இவ்விழாவுக்காக கடந்த ஏப். 25-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி மற்றும் ரத்தினகிரீஸ்வரருக்கு துவஜாரோகனம் ஆகியவை நடத்தப்பட்டு விழா துவங்கியது இரவு உற்சவர் மூர்த்தி புஷ்ப விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.