பதிவு செய்த நாள்
05
மே
2014
01:05
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்வதால், பக்தர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்ற மாதாந்திர பூஜைகளும், மாசி மகம் பிரம்மோற்சவம் போன்ற 10 நாள் பூஜைகளும் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள், கொண்டு வரும் வேன், கார், இருசக்கர வாகனங்கள் கோவில் வாசலில் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதித்தது. அதைத் தொடர்ந்து, கோவிலுக்கு எதிரே வாகனம் நிறுத்துமிடம் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் வாகனங்களை சாலையி@ல@ய நிறுத்துவது தொடர்கிறது. மேலும், மணலூர் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு, கடந்த ஓராண்டாக பஸ் போக்குவரத்து துவங்கிய நிலையில் கோவில் வாசலில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.