பதிவு செய்த நாள்
05
மே
2014
03:05
புதுச்சேரி: பெரிய மார்க்கெட் பூக்கடை வரசித்தி வீர விநாயகர் கோவில், இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. பெரிய மார்க்கெட் பூக்கடை அரசமரத்தடியில் உள்ள வரசித்தி வீர விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, புண்ணியா ஹவாசனம், 108 சங்கு ஸ்தாபனம், கணபதி வேத மற்றும் மூலமந்திர மகா ஹோமம், முதல் கால பூஜைகளும், மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, கலச பூஜை மற்றும் ஷண்ணவதி ஹோமமும் அதைத்தொடர்ந்து விநாயகருக்கு விஷேச திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, 108 சங்காபிஷேகத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, பெரிய மார்க்கெட் பூக்கடை வியாபாரிகள் செய்திருந்தனர். காய், கனி மொத்த வியாபாரி சின்னக் குழந்தை, பூக்கடை செல்வகுமார், சக்திவேல், ஜோதிநாராயணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.