அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2014 10:05
எழுமலை: மதுரை அத்திபட்டி புதுமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசித்தனர். இக்கோயில் திருவிழா, மே 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். 3ந் தேதி அம்மன் மயில் வாகனத்தில் அருள்பாலித்தார். 4ந் தேதி ஆக்கிப் படைத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் பூப்பல்லக்கில் அம்மன் பவனி வருதலும் நடந்தன.நேற்று பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், 21 அக்னி தீபம் எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால் குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் குதிரை வாகனத்தில் பவனி வந்தார்.விழாவையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பேரையூர் டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.