பதிவு செய்த நாள்
06
மே
2014
05:05
திருச்சி: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் நடு அக்ரஹாரத்தில் வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி ஐந்து நாட்களுக்கு 26ம் ஆண்டு சீதா-ராம கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 5 மணிக்கு சீனிவாச கணபாடிகள், பிரசன்னா கணபாடிகள் ஆகியோரது கணபதி ஹோமத்துடன் உற்சவம் துவங்குகிறது. காலை உபயதாரர்கள் அர்ச்சனை, உஞ்சவிருத்தியும், 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அகண்தாரக ராம மந்தில ஜெபம் நடக்கிறது. மாலை விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணமும், இரவு ஸ்ரீரங்கம் ஆனந்தராவ் பாகவதர் கோஷ்டியின் பஜனையும், திவ்யநாம பஜனையும் நடக்கிறது. இரண்டாம் நாள் உபயதாரர் அர்ச்சனை, லட்சார்ச்சனை, மஹா தீபாராதனை நடைபெறும். மாலை திருவிளக்கு பூஜை, விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணமும், மாஸ்டர் ஜானகிராமன் கீ போர்டு இன்னிசை கச்சேரியும், இரவு போத்தனூர் நாகராஜராவ் பாகவதர் கோஷ்டியின் ஹரி பஜனை, திவ்யநாம பஜனையும் நடக்கிறது. மூன்றாம் நாள் காலை உபயதாரர்கள் அர்ச்சனை, உஞ்சவிருத்தி, பாகவத பக்த ஆராதனை, மாலை விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணமும், இரவு பாகவதர் கோஷ்டியின் ஹரி பஜனையும், விசேஷ திவ்யநாம பஜனையும் நடக்கிறது. நான்காம் நாள் உஞ்சவிருத்தியும், கொட்டனோத்ஸவமும், சீதா ராம கல்யாணம், மஹா தீபாராதனை நடக்கும். மாலை கல்யாண உற்சவ பட ஊர்வலம், இரவு மாயவரம் ஞானகுரு பாகவதர் கோஷ்டி ஹரி பஜனை, விசேஷ திவ்யநாமம், பவ்வளிம்பு, வசந்த கேளிக்கை நடக்கும். கடைசி நாள் காலை உபயதாரர்கள் அர்ச்சனை, மாயவரம் ஞானகுரு பாகவதர் கோஷ்டி பக்தோஸ்வமும் நடக்கிறது. புஷ்ப அலங்காரங்களை கிருஷ்ணராயபுரம் மதுராநாதன், ஈரோடு தியாகராஜன் செய்கின்றனர். யஜூர் வேத பாராயணம், ருக் வேத பாராயணம் நடக்கும். உற்சவ ஏற்பாடுகள் திருச்சி தேசிய கல்லூரி பேராசிரியர் சுந்தரராமன் செய்துள்ளார். உற்சவ ஏற்பாட்டு ஆலோசனைகளை கிருஷ்ணராயபுரம் பசுபதி பாகவதர், சோ சுந்தர பாகவதர், ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி சந்திரசேகரன் ஆகியோர் அளித்து வருகின்றனர். பஜனை சமயத்தில் பூஜையை நங்கவரம் வெங்கட்ராம பாகவதர் செய்வார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.