பதிவு செய்த நாள்
08
மே
2014
11:05
ஊத்துக்கோட்டை: கத்திரி வெயிலில், மகா கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது மகா கால பைரவர் கோவில். இந்த கோவிலில், ஒவ்வொரு மாதமும், அஷ்டமி நாளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், கத்திரி மாத தேர் பவனி, டிசம்பர் மாதம் மகா கால பைரவர் ஜெயந்தி விழா ஆகியவை நடைபெறும். கடந்த, 4ம் தேதி, கத்திரி வெயில் துவங்கியது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, பைரவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன.பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் அமர்ந்து, தொம்பரம்பேடு, ஆலங்காடு, பால்ரெட்டிக்கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.