பதிவு செய்த நாள்
09
மே
2014
01:05
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், நரசிம்ம ஜெயந்தி விழா வரும் 12ம் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி பாலக்காடு சாலை லட்சுமி நரசிம்மர் கோவிலில், லஷ்மி நரசிம்மர் ஜெயந்தி விழா வரும் 12ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு விஷ்வக்சேனர் ஆராதனம், வாசுதேவ புண்யாகவாசனம், அனுக்ஞை, மகா சங்கல்பம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும்; மாலை 4:00 மணிக்கு நரசிம்ம பிரோதஷ பூஜை, 16 வகையான திருமஞ்சனஅபிேஷகம், அலங்கார நைவேத்திய பூஜை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜையும் நடக்கிறது. 13ம் தேதி காலை6:00 மணிக்கு திரவியாகுதி, மகாபூர்ணாகுதி, நைவேத்திய பூஜை,அலங்கார பூஜையும்; மாலை 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. ஆனைமலை : ஆனைமலை லஷ்மி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா வரும் 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு மகா திருமஞ்சனத்துடன் துவங்குகிறது. அதிகாலை 4:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், காலை 8:00 மணிக்கு ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல்; மதியம் 10:00 மணிக்கு மகா தீபாராதனை, தரிசனமும் நடைபெறுகிறது. 13ம் தேதி மாலை 6:30 மணிக்கு இரண்ய சம்ஹாரம், விஸ்வரூப தரிசனம், மாலை 7:00 மணிக்கு மகா தீபராதனையும்; 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், மகா லட்சுமி, நரசிம்மர் ேஹாம பூஜையும் நடக்கிறது. 17ம் தேதி காலை 5:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், மகா லட்சுமி ேஹாமம், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை திருக்கல்யாண உற்சவமும்; 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.