பதிவு செய்த நாள்
10
மே
2014
11:05
ஊட்டி: ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் இன்று 109வது மாநாடு மற்றும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. கோவை பேரூர் ஆதீனம் மற்றும் ஊட்டி ஆதீனம் மருதாச்சல அடிகளார், சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில், காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் துவங்கிய 109வது மாநாட்டில், காலை 10:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது. பி.மணியட்டி குருபிரகாச சுவாமிகள், கோபால்சாமி அடிகளார் முன்னிலை வகித்தனர். சொர்ணா சோமசுந்தரம் குழுவினரின் திருமுறை பண்ணிசை, நூல் வெளியிடப்பட்டது.இன்று காலை சைவ மகளிர் மாநாடு, பகல் 12:00 மணிக்கு சைவ இளைஞர் மாநாடு நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு தோடர், கோத்தர், படுகர் இன மக்களின் கலை நிகழ்ச்சி, 11ம் தேதி சைவர் பொது மாநாடு, நிறைவு விழா நடக்கிறது.இதில், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள், ஊட்டி யாதீனம் மருதாசல அடிகளார், சிவப்பிரகாசசுவாமிகள் , மடாதிபதிகள், சிவனடியார், முருக பக்த பேரவையினர், காசி விஸ்வநாத சுவாமி கோவில் சேவா சங்கத்தினர், முன்னேற்ற சங்கத்தினர், பேரூர் தமிழ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.