பழநி : பழநி அடிவாரப்பகுதியில், நேற்று இடியுடன் பலத்த காற்று வீசியதால், ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு, பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் காலை 7:00 முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. மலைஅடிவாரப்பகுதியில் பலத்த மழை, காற்று வீசும்போது, ரோப்கார் நிறுத்தப்படுவது வழக்கம்.பழநி மலை அடிவார பகுதியில், நேற்று பகல் 3:00 மணிக்கு, 40 கி.மீ., முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது, சிறிதுநேரம் சாரல் மழை பெய்தது, இதனால் ரோப்கார் நேற்று பகல் 3:25 முதல் பகல் 3:55 மணிவரை நிறுத்தப்பட்டது. 30 நிமிடத்திற்கு பின், மீண்டும் இயக்கப்பட்டது.வின்ச் ஸ்டேஷனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் இரண்டரை மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர்.