பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
உடுமலை : உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி, திருக்கல்யாண உற்சவம் இன்று துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. உடுமலை, நேரு வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, இன்று காலை 5.00 மணிக்கு, கணபதி ேஹாமம், கோ பூஜை நடக்கிறது. காலை 9.00 முதல் 11.00 மணிக்குள், முளைப்பாலிகையிடுதல், கொடியேற்றம் நடக்கிறது. 11.30 மணிக்கு கோவில் விழா கமிட்டியினர் தீர்த்தம் கொண்டுவர திருமூர்த்திமலைக்கு புறப்படுகின்றனர். மாலை 6.00 மணிக்கு கும்பஸ்தாபிதம் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு, நடன நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 10.00 மணிக்கு, அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் பூஜை நடக்கிறது. இரவு 8.00 மணிக்கு, இன்னிசை பாட்டு மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.