பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
திருப்புத்தூர் : திருப்புத்தூர் சீதளி மேல்கரை சிவகாம சுந்தரி சமேத ஆதி திருத்தளிநாதர் கோயில், புதிய பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை பூஜை நடந்தது. மே 9ல், புதிய பரிவார மூர்த்திகளான விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கேஷ்வரர், முருகன்,வள்ளி-தெய்வானை, பிரம்மா,சண்டிகேஷ்வரர், துர்க்கை, ஆஞ்சநேயர், நவக்கிரகம், லட்சுமி, வில்வலிங்கம் ஆகிய சுவாமிகளுக்கு, குருக்கள் பாஸ்கர் தலைமையில், பிரதிஷ்டை பூஜை நடந்தது. தொடர்ந்து, முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. சுவாமிகளுக்கு, பொன்னம்பல அடிகள் தலைமையில், சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. பிரதோஷ குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.