பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், நாளை (மே13) சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில், மே 4ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா பிரமோத்ஸவ விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் இரவு வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் வீதி உலா வந்தார். இன்று, இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார். தேரோட்டம்: முக்கிய நாளான, நாளை (மே13) தேரோட்டத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில், பூதேவி, ஸ்ரீதேவியருடன், பெருமாள் எழுந்தருள்வார். அன்று மாலை 4:50 மணிக்கு, தேரோட்டம் நடைபெறும்.