பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
பாசத்துடன் பழகி மகிழும் கன்னி ராசி அன்பர்களே!
சுக்கிரன் மே 24ல் மேஷத்திற்கு மாறுவதால் நன்மை உண்டாகும். சந்திரனும் பெரும்பாலான நாட்களில் நன்மை அளிப்பார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குரு ராசிக்கு 10ல் இருப்பதால் தடை பல குறுக்கிடும். மனதில் வெறுப்பு மேலோங்கும். ஆனால், குரு ஜூன் 13ல் இடம்மாறி 11-ம் இடமான கடகத்திற்கு வருவது நல்லது. பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குருவின் 7, 9-ம் பார்வையாலும் நன்மையே. நீண்ட நாள் கனவும் கூட நிறைவேறும். எடுத்த புதுமுயற்சியும் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். மே 24-ந் தேதிக்கு பிறகு வசதி பெருகும். குடும்பம் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர்பார்க்கலாம். சூரியனால் மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம். வீண்விவாதங்களை தவிர்க்கவும். உடல் நலம் பாதிக்கப்படலாம்.
தொழில், வியாபாரத்தில் அனுகூலமான போக்கு காணப்படும். பணவரவு திருப்தி அளிக்கும். செவ்வாயால் பகைவர் தொல்லை அதிகரிக்கும். பெண்கள் வகையில் இருந்த தொல்லை மே 24-ந் தேதிக்கு மறையும். பணியாளர்கள் அதிக பணிச்சுமையை சந்திக்க வேண்டியதிருக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனவேதனை வரலாம். சிலர் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். கலைஞர்களுக்கு கடந்த மாதம் இருந்த பிற்போக்கான நிலை மாறி, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பாராட்டு, புகழ் தானாக வந்து சேரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியைப் பெற வாய்ப்புண்டு. பணப் புழக்கத்திற்கும் குறைவிருக்காது. மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற பொறுமை தேவை. பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பை பெறுவர். ஆடம்பர பொருட்கள் கிடைக்கப் பெறுவர். தாய்வழி உறவினரின் ஆதரவு கிடைக்கும்.
நல்ல நாள்: மே15,16,21,22,23,24,25,30,31, ஜூன்1,2,3,7,8, 11,12,13
கவன நாள்: மே 26,27. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,5 நிறம்: வெள்ளை, ஊதா
பரிகாரம்: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.பைரவருக்கு பூஜை செய்வது நல்லது. வயதானவர், துறவிகளுக்கு இயன்றதைகொடுத்து உதவுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள்.