விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவில், வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி சத்ய பாமா சமேத ராஜகோபால சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கி வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் கொடியேற்றம், 10:00 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீர்த்தம் வழங்கல், பிற்பகல் சேவாகாலம், சாத்துமுறை, இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த சந்திரபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.