கம்மாபுரம்: கோட்டேரி சிறுதொண்ட நாயனார் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கம்மாபுரம் அடுத்த கோட்டேரி சிறுதொண்ட நாயனார் கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் (11ம் தேதி) மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பிரவேசம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று (12ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவ பூஜை, தீபாராதனை, காலை 9:00 மணிக்கு யாத்ராதானம் செய்து கடம் புறப்பாடு, காலை 9:30 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.