புதுச்சேரி: திலகர் நகர், நவசக்தி மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திலகர் நகரில் உள்ள நவசக்தி மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. காலை 7.,15 மணிக்கு சிவசக்தி விநாயகர் சுவாமிக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.