செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2014 12:05
செஞ்சி: செஞ்சி அடுத்த செல்லபிராட்டியில் உள்ள லலிதா செல்வாம்பிகை கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து. தாமரை தடாக அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதா செல்வாம் பிகை கவசம், லலிதா செல்வாம்பிகை 1008 மந்திரங்கள் படிக்கப்பட்டன. விஷேச திரவிய ஹோமம் நடந்தது.இரவு 9 மணிக்கு மகா புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு 12 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன், கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.