குளித்தலை லெட்சுமி பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2014 02:05
குளித்தலை: குளித்தலை வைகைநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி, சித்ராபௌர்ணமி விழா நடக்கிறது. நரசிம்ம ஜெயந்தி விழாவில் மழை வேண்டி கிராமம் செழிக்க, மக்கள் நலம்பெற, தொழில் செழிக்க, தம்பதிகள் நீடுழி வாழ தானியம் செழிக்க, 108 கலச பூஜை மற்றும் பால், தயிர், திரவியபொருட்கள், பழவகைகள், இளநீர், வஸ்திரங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 2ம் நாளான நேற்று சித்ராபௌர்ணமி விழாவையொட்டி காலை, 7 மணியளவில் லெட்சுமி நாராயணபெருமாள் திருவீதிவிழா சென்று கடம்பனேஸ்வரர் ஆலயம் அடைந்து அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை கடம்பனேஸ்வரர் கோவிலில் ஹரியும், சிவனும் சந்தித்தனர்.