பதிவு செய்த நாள்
19
மே
2014
11:05
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று பெருமாள் "கள்ளழகர் கோலத்துடன், பக்தர்களில் "கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் கோயிலுக்கு திரும்பினார். இக்கோயிலில் மே 9ல் சித்திரை திருவிழா துவங்கியது. பத்தாம் நாளான நேற்று காலை 8 மணிக்கு வைகையில் இருந்து புஷ்ப பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், நகரில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். மேள, தாளம் முழங்க, வான வேடிக்கைகளுக்கு மத்தியில், நகரானது விழாக்கோலத்துடன் அனைத்து வீடுகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு கோயில் வாசலை அடைந்து, கருப்பண்ணசாமியிடம் விடை பெற்றுச் சென்ற அழகர், சிறப்பு தீபாராதனைகளுடன் கோவிலுக்கு திரும்பினார். அப்போது, பக்தர்களின் "கோவிந்தா கோஷமானது விண்ணை முட்டியது. இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று(மே 19) பகல் உற்சவசாந்தி வைபவம், அபிஷேகம், தீபாராதனைகளும், நாளை(மே 20) காலை பாலாபிஷேகம், இரவில் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.