பதிவு செய்த நாள்
19
மே
2014
12:05
நாமக்கல்: என்.ஜி.ஜி.ஓ., காலனி நித்ய சுமங்கலி மங்கள மாரியம்மன் கோவிலில், திருத்தேர் வசந்த பெருவிழா, நாளை (மே, 20) கம்பம் நடுதல், பூச்சொரிதலுடன் கோலாகலமாக துவங்குகிறது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, நான்காவது வார்டு என்.ஜி.ஜி.ஓ., காலனியில், நித்ய சுமங்கலி மங்கள மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் திருத்தேர் வசந்த பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, 17ம் ஆண்டு பெருவிழா, நாளை (மே, 20) இரவு, 7.30 மணிக்கு, கம்பம் நடுதல், பூச்சொரிதலுடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து, மே, 21 முதல், 25ம் தேதி வரை, இரவு, 7.30 மணிக்கு கட்டளைதாரர்கள் அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. மே, 26ம் தேதி காலை, 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், 9 மணிக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், சக்தி அழைப்பு, மதியம், 1 மணிக்கு பூஜை, தீபாராதனை நடக்கிறது. இரவு, 7 மணிக்கு பூச்சொரிதல், மகா கும்பம் அழைப்பும் நடக்கிறது. மே, 27ம் தேதி காலை, 7.30 மணிக்கு அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், பகல், 1.30 மணிக்கு, அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிடப்படுகிறது. இரவு, 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், மாவிளக்கு அழைப்பு, மகா தீபாராதனையும் நடக்கிறது. மே, 28ம் தேதி காலை, 7.30 மணிக்கு, பூஜை, அபிஷேகம், தீபாராதனை, 9 மணிக்கு, அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, 10 மணிக்கு பூஜை, திருமஞ்சனமும் நடக்கிறது.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.