பதிவு செய்த நாள்
19
மே
2014
12:05
சிதம்பரம் : இருநூற்று அறுபத்தேழு தேவாரப்பாடல் பெற்ற திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் 15 பேர் நேற்று சிதம்பரத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. ஒற்றுமை, உலக நன்மை மற்றும் மழை வேண்டி 267 தேவாரப் பாடல் பெற்ற தலத்தை 15 பேருக்கு கொண்ட குழுவினர் சேது தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையாக தரிசித்து வருகின்றனர். கும்பகோணம், திருவையாறு, திருச்சி, திருவாரூர், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரிசித்து விட்டு நேற்று சிதம்பரம் வந்தனர். சிதம்பரத்தில் நடராஜர் கோவில், திருவேட்களம், சிவபுரி, திருக்கழிபாளை, திருநாரையூர், ஓமாம்புலியூர், கால்நாட்டாம்புலியூர், மேலகடம்பூர் ஆகிய பகுதிகளை 3 நாட்கள் தங்கி தரிசிக்கின்றனர். 150 நாள் பயணத்திற்கு பின் ஜூன் 29 தேதி சென்னை அடுத்த திருக்காலத்தியில் பாதயாத்திரை நிறைவடைகிறது.செயலர் ராகவேந்திரன், துணைத் தலைவர் வெள்ளைச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர்.