அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சித்திரையின் கடைசி ஏழு நாட்களும், வைகாசியின் முதல் ஏழு நாட்களும் பழநியில் இரவு, பகலாக பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அக்னி நட்சத்திரத்தின் கடைசி நாளில், உள்ளூர் கோயில் முத்துக்குமாரசுவாமி மலையடி வாரத்தில் இருக்கும் பூக்கட்டி மண்டபத்திற்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்குவார்.